செய்திகள்

நுங்கம்பாக்கத்தில் உள்ள நகைக்கடை அதிபரின் வீட்டை ஏலத்தில் விட முடிவு

Published On 2018-03-22 05:40 GMT   |   Update On 2018-03-22 05:40 GMT
போலி ஆவணங்கள் மூலம் 14 வங்கிகளில் ரூ.824 கோடி கடன் வாங்கிய நகைக்கடை அதிபருக்கு சொந்தமாக நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டை ஏலத்தில் விட வங்கி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
சென்னை:

போலி ஆவணங்கள் மூலம் 14 வங்கிகளில் ரூ.824 கோடி கடன் வாங்கி மோசடி செய்த தொழில் அதிபர் அபேஸ்குமாரின் வீடு நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலையில் உள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த பூபேஸ்குமார், வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டார். இதனை தொடர்ந்து இந்த வீட்டை முடக்குவதற்காக வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இன்று காலையில் ஸ்டேட் வங்கி அதிகாரிகள் 7 பேர் கோத்தாரி சாலையில் உள்ள வீட்டுக்கு சென்றனர்.

நுங்கம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நகைக் கடை அதிபரின் வீட்டில் ஸ்டேட் பாங்கி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்ட சென்ற காட்சி.

பூபேஸ்குமாரின் வீட்டில் அவர் வங்கியில் வாங்கிய கடன் தொகையை குறிப்பிட்டு நோட்டீஸ் ஒட்டினர். அதில் நீங்கள் வாங்கிய கடனுக்காக பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் கடனை திருப்பி செலுத்தவில்லை. இதனால் உங்களது வீட்டை ஏலத்தில் விட முடிவு செய்துள்ளோம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

வங்கி அதிகாரிகள் நடவடிக்கையால் அடுக்கு மாடி குடியிருப்பில் பரபரப்பு நிலவியது. #Tamilnews
Tags:    

Similar News