செய்திகள்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த பட்ஜெட்டில் ரூ.172 கோடி ஒதுக்கீடு

Published On 2018-03-15 07:05 GMT   |   Update On 2018-03-15 07:05 GMT
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்காக பட்ஜெட்டில் ரூ.172 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. #TNBudget #OPS
சென்னை:

தமிழக சட்டசபையில் இன்று 2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

• உள்ளாட்சி தேர்தல் நடத்த ரூ.172.27 கோடி ஒதுக்கீடு
• கிண்டியில் ரூ.20 கோடியில் அம்மா பசுமைப் பூங்கா தொடங்கப்படும்
• சென்னை மாநில கல்லூரியின் விக்டோரியா விடுதியில் உள்ள பாரம்பரிய கட்டடங்கள் புதுப்பிக்கப்படும்
• நகராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ.13,986.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
• கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ.1,227.89 கோடி ஒதுக்கீடு
• பால்வளத்துறைக்கு ரூ.130.82 கோடி ஒதுக்கீடு
• அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் மானியம் வழங்க ரூ.500.65 கோடி ஒதுக்கீடு
• ரூ.24 கோடி செலவில் பொன்னேரி, நசரத்பேட்டையில் அவசர சிகிச்சை பிரிவுகள்
• மீன்வளத்துறைக்கு ரூ.1,016.53 கோடி நிதி ஒதுக்கீடு
• உயர் கல்வித்துறைக்கு ரூ.4,620 கோடி நிதி ஒதுக்கீடு
• நாகை மாவட்டத்தில் வெள்ளப்பள்ளம், தரங்கம்பாடியில் ரூ.220 கோடியில் மீன்பிடித் துறைமுகங்கள்
• வரும் நிதியாண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.8000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்
• தூய்மை இந்தியா இயக்கத்திற்காக ரூ.1,074 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
• ஜிஎஸ்டி வரி விதிப்பால் தமிழகத்திற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது
• பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.333.36 கோடி ஒதுக்கீடு போன்றவை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. #TNBudget #TNBudget2018 #TNbudgetsession #OPS #tamilnews
Tags:    

Similar News