செய்திகள்

குரங்கணி காட்டுத்தீ குறித்து விசாரிக்க அதுல்ய மிஸ்ரா நியமனம் - தமிழக அரசு

Published On 2018-03-14 11:14 GMT   |   Update On 2018-03-14 11:14 GMT
தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கி 11 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விசாரிக்க அதுல்ய மிஸ்ராவை தனி அதிகாரியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. #TheniForestFire #TheniFire
சென்னை:

தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது குரங்கணி வனப்பகுதி. இந்த மலைப்பகுதியில் கடந்த ஞாயிறு அன்று திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதில், சென்னையில் இருந்து சுற்றுலா சென்ற 11 பேர் காட்டுத்தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்

இந்நிலையில், குரங்கணி காட்டுத்தீ சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய அதுல்ய மிஸ்ராவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ். அதிகாரி அதுல்ய மிஸ்ரா இரண்டு மாதங்களில் விசாரணையை முடித்து அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். காட்டுத்தீ ஏற்பட்டதற்கான பின்னணி உள்ளிட்டவை குறித்தும் விசாரணை நடத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தேவையான பரிந்துரைகளை அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

விசாரணை அதிகாரியின் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. #TheniForestFire #TheniFire #Theni
Tags:    

Similar News