செய்திகள்

கோவை மலைபகுதிகளுக்குள் அத்துமீறி நுழைந்தால் கடும் நடவடிக்கை- மண்டல அதிகாரி எச்சரிக்கை

Published On 2018-03-12 06:54 GMT   |   Update On 2018-03-12 06:54 GMT
கோவை மாவட்ட வனப்பகுதிகளுக்குள் அனுமதி இல்லாமல் யாரேனும் அத்துமீறி நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மண்டல வன பாதுகாப்பு அதிகாரி ராமசுப்பிரமணியம் எச்சரித்துள்ளார்.

கோவை:

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் மலை ஏற்ற பயிற்சிக்கு சென்ற பெண்கள் உள்பட 9 பேர் தீ விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மொத்தம் 36 பேர் மலை ஏற்ற பயிற்சிக்காக சென்ற நிலையில், தீ விபத்தில் சிக்கி படுகாயமங்களுடன் மீட்கப்பட்ட 27 பேருக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவர்கள் வனத்துறை அனுமதி இல்லாமல் மலை ஏற்ற பயிற்சிக்காக சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாவட்ட வனப்பகுதிகளுக்குள் அனுமதி இல்லாமல் யாரேனும் அத்துமீறி நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மண்டல வன பாதுகாப்பு அதிகாரி ராமசுப்பிரமணியம் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

பொதுவாக கோவை மாவட்ட மலை பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிக மாக இருக்கும் என்பதால் யாரையும் அனுமதி இல்லா மல் அனுமதிக்க மாட்டோம். பரளிக்காடு வனபகுதியில் படகுசவாரி கூட வனத்துறை பாதுகாப்போடு நடைபெறு கிறது.

படகு சவாரிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்கி ருந்து வேறு வனபகுதிகளுக் குள் செல்ல அனுமதிப்பது கிடையாது. இதேபோல வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவை குற்றாலம் அருவிக்கும் குளிப்பதற்காக மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் வேறு எங்கும் செல்வது கிடையாது.

எனவே வன பகுதி களுக்குள் வனத் துறையின் அனுமதி இல்லாமல் மலை பகுதிகளுக்குள் யாரேனும் அத்துமீறி நுழைந்தால் அவர்கள் மீது வன பாது காப்பு சட்டப்படி வழக்குப் பதிவு செய்து கடும் நடவ டிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News