செய்திகள்

ஜெயலலிதா மரணம் - விசாரணை ஆணையத்தில் விவேக் ஜெயராமன் ஆஜர்

Published On 2018-02-13 07:29 GMT   |   Update On 2018-02-13 07:29 GMT
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் முன்பு விவேக் ஜெயராமன் ஆஜராகி விளக்கம் அளித்தார். #JayalalithaDeath

சென்னை:

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டது.

விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்தபோது இருந்த அதிகாரிகள், டாக்டர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். தலைமை செயலாளர்கள், தனி செயலாளர். குடும்ப மருத்துவர் என இதுவரையில் 25 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரிடமும் சிகிச்சையின்போது ஜெயலலிதாவை பார்த்தீர்களா? அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம் என்ன? என்பது குறித்தும் மருத்துவமனையில் சேருவதற்கு முன்பு அவரது உடல்நிலை எவ்வாறு இருந்தது என்பது உள்ளிட்ட நீதிபதியின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர்.

சசிகலாவின் தம்பி மனைவி இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவிற்கு சம்மன் அனுப்பப்பட்டு அவரும் கடந்த மாதம் ஆணையத்தில் ஆஜரானார்.

இந்த நிலையில் இளவரசியின் மகனும் ஜெயா டி.வி.யின் சி.இ.ஓ.மான விவேக் ஜெயராமனை ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அவர் அதனை ஏற்று இன்று காலையில் நீதிபதி முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.

ஜெயலலிதா மரணம் அடைந்த போது விவேக் வெளிநாட்டில் இருந்தார். தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் அவர் சென்னை வந்தார். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது போயஸ் கார்டனில் விவேக் இருந்தார். அதன் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. #JayalalithaDeath #tamilnews

Tags:    

Similar News