செய்திகள்

ஊத்துக்கோட்டையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்

Published On 2018-01-21 10:25 GMT   |   Update On 2018-01-21 10:25 GMT
ஊத்துக்கோட்டையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட நேரு பஜார் சாலை, திருவள்ளூர் சாலை, நாகாலாபுரம் சாலை, சத்தியவேடு சாலைகளில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து பலர் கடைகளை கட்டி உள்ளனர்.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தினந்தோறும் ஏற்படும் நெரிசலால் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து மெதுவாக செல்லும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. எனினும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவிலை.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி உத்தரவின்படி ஊத்துக்கோட்டை தாசில்தார் கிருபாஉஷா, துணை தாசில்தார் கதிர்வேலு, துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணகுமார் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை தாசில்தார் கிருபா உஷா, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர். இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

திருவள்ளூர் நகரில் உள்ள ஜெ.ஏன்.சாலை, சி.வி நாயுடு சாலைகளில் நடைபாதை கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சாலையின் இருபுறங்களிலும் அதிகரித்துவரும் நடை பாதை கடைகளால் போக்குவரத்து நெரிசலும், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.

இது குறித்து திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்திக்கு ஏராளமான புகார்கள் குவிந்தன.

இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் ஜே.என்.சாலையில் உள்ள உழவர் சந்தை அருகில் நடை பாதையில் அமைத்திருந்த கடைகளை அகற்றினார். மேலும் தொடர்ந்து நடைபாதை கடை நடத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.
Tags:    

Similar News