செய்திகள்

சென்னை மாநகர பஸ்களில் 50 ரூபாய் கட்டண தினசரி பாஸ் ரத்து

Published On 2018-01-20 05:14 GMT   |   Update On 2018-01-20 05:31 GMT
சென்னை மாநகர பஸ்களில் திடீரென நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பஸ் கட்டண உயர்வினால், ரூ.50 கட்டணம் கொண்ட தினசரி பஸ் பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். #busfareshike

சென்னை:

சென்னை மாநகர பஸ்களில் பயணம் செய்வதற்காக மாதாந்திர கட்டண பாஸ், வாராந்திர கட்டண பாஸ், தினசரி கட்டண பாஸ் ஆகியவை வழங்கப்படுகிறது.

மாதாந்திர கட்டண பாஸ் ரூ.1000 எனவும், வாராந்திர கட்டண பாஸ் ரூ.300 எனவும், தினசரி கட்டண பாஸ் ரூ.50 எனவும் உள்ளது. இந்த பாஸ் வைத்திருப்பவர்கள் மாநகர பஸ்களில் ஏறி சென்னை நகருக்குள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.

பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் பஸ் பாஸ் வைத்திருப்பவர்களுக்கு கட்டணம் உயர்த்தப்படுமா? அல்லது அதே கட்டணம் தொடருமா என்ற சந்தேகம் இருந்தது.

இந்த நிலையில் ரூ.50 கட்டணம் கொண்ட தினசரி பஸ் பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மாதாந்திர மற்றும் வாராந்திர பஸ் பாஸ்களை வைத்திருப்பவர்கள் தொடர்ந்து பஸ்களில் பயணம் செய்யலாம். அந்த பாஸ்களின் கட்டணத்தை எவ்வளவு உயர்த்துவது என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

உயர்த்திய கட்டணத்தை அறிவித்த பிறகு மாதாந்திர மற்றும் வாராந்திர பாஸ் வைத்திருப்பவர்கள் கூடுதல் கட்டணத்தை செலுத்தி பஸ்களில் பயணிக்கலாம். #busfareshike #tamilnews

Tags:    

Similar News