செய்திகள்

நடந்தது நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும் - விஜயகாந்த் பொங்கல் வாழ்த்து

Published On 2018-01-13 09:40 GMT   |   Update On 2018-01-13 09:40 GMT
நாளை உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அவரது டுவிட்டர் பக்கத்தில் பொங்கல் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். #Vijayakant #Pongal2018 #Pongal

சென்னை:

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட இருக்கிறது. 

முதல் நாளான இன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழைய எண்ணங்களை தீயில் இட்டு, புதிய எண்ணங்களை மனதில் வளர்ப்பதே போகி பண்டிகையாகும். அதனைத் தொடர்ந்து நாளை பொங்கல் திருநாளும், அதற்கு அடுத்தடுத்த நாட்களில் மாட்டுப் பொங்கல், கானும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.  

பொங்கல் பண்டிகைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும். சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அவரது டுவிட்டர் பக்கத்தில் பொங்கல் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவரது டுவிட்டர் வாழ்த்து பின்வருமாறு,



உழவர் திருநாளாகவும், அறுவடை திருநாளாகவும், தமிழர் திருநாளாகவும், பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. நெற்றி வியர்வை நிலத்தில் விழ, பாடுபட்டு பலனை அனுபவிக்கும் நாள் பொங்கல் திருநாள். இந்த பொங்கல் திருநாள் மக்கள் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தி ஒளிமயமான எதிர்காலம் உருவாக வேண்டும். பழையன கழிதலும், புதியன புகுதலும்! என்பது இயற்கையின் நியதி. கடந்த ஆண்டு நடந்தது நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும்.இந்த பொங்கல் திருநாளை பெற்றோர்களுடனும், குழந்தைகளுடனும் உற்றார் உறவினர்களுடனும், நண்பர்களுடனும் சேர்ந்து உறவாடி மகிழ்ந்து கொண்டாடவேண்டும், என்று குறிப்பிட்டிருக்கிறார். #Vijayakant #Pongal2018 #Pongal #tamilnews
Tags:    

Similar News