செய்திகள்

மாற்று திறனாளி மாணவருக்கு ரூ.30 ஆயிரம் உதவி: சட்டசபையில் அமைச்சர் தகவல்

Published On 2018-01-11 10:59 GMT   |   Update On 2018-01-11 10:58 GMT
தேசிய தடகளத்தில் சாதனைப் புரிந்த மாற்று திறனாளி மாணவர் மணிகண்டனுக்கு ரூ.30 ஆயிரம் உதவி வழங்கப்படும் என்று சட்டசபையில் விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
துரையூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமார் சட்டசபையில் பேசும் போது, “திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணவர் மணிகண்டன். இவர் காது கேட்காத, வாய் பேசமுடியாத மாற்று திறனாளி. இவர் தேசிய தடகள போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டரில் தங்கம் பதக்கம் பெற்றுள்ளார்.

உலக ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. எனவே தமிழக அரசு சார்பில் மாணவருக்கு உதவி வழங்க வேண்டும்” என்றார்.

இதற்கு பதிலளித்த விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கூறுகையில், “மாணவர் மணிகண்டன் வெளிநாடு சென்று வர விமான டிக்கெட் செலவுக்காக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். திருச்சி அபர்ணா விளையாட்டு அரங்கத்தில் அவர் இலவசமாக பயிற்சி பெறவும், உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படும்” என்றார்.
Tags:    

Similar News