செய்திகள்

ஒத்தக்கடையில் துணி எடுப்பதுபோல் சேலை திருடிய பெண்கள் கைது

Published On 2017-12-16 10:25 GMT   |   Update On 2017-12-16 10:25 GMT
ஒத்தக்கடையில் ஜவுளி கடையில் சேலைகள் மற்றும் பொருட்கள் திருடியதாக 3 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலூர்:

மதுரை ஒத்தக்கடை பஜாரில் ஜவுளி கடை உள்ளது. இங்கு இன்று 3 பெண்கள் உள்பட 4 பேர் துணி எடுக்க வந்தனர். அவர்கள் கடை ஊழியர்களி டம் ஒவ்வொரு துணியாக எடுத்து போடும்படி கூறினர். ஊழியர்களின் கவனத்தை திசைதிருப்பிய 4 பேரும் அங்கிருந்த சேலை மற்றும் பொருட்களை நைசாக அபேஸ் செய்தனர்.

இதனை கவனித்து விட்ட கடை நிறுவனத்தினர் 4 பேரையும் கையும், களவுமாக பிடித்து ஒத்தக்கடை போலீ சில் ஒப்படைத்தனர்.

இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தனிப்பிரிவு ஏட்டு மணிகண்டன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்களது பெயர் செல்லச்சாமி (வயது52), ஜெயம்மா (40), சுதா (39), மல்லிகா (45) என தெரியவந்தது. 4 பேரும் விக்கிரமங்கலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இதேபோல் வேறு எங்காவது கைவரிசை காட்டி உள்ளார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையில் வடமாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மேலூர், ஒத்தக்கடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெட்சீட், அலங்கார பொருட்கள் போன்றவற்றை கை சுமையாக கொண்டு வந்து விற்பதுபோல் நடித்து வீடுகளில் கொள்ளையடிக்க நோட்டமிடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சந்தேகப்படும்படி தள்ளுவண்டிகளுடன் வியாபாரம் செய்த 5 வட மாநில இளைஞர்களை பிடித்து சென்று மேலூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News