செய்திகள்

ஆர்.கே.நகரில் போட்டியிடும் 59 பேரில் 4 வேட்பாளர்கள் கிரிமினல்

Published On 2017-12-15 05:40 GMT   |   Update On 2017-12-15 05:40 GMT
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 4 வேட்பாளர்கள் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் என ஜனநாயக மறு சீரமைப்பு அமைப்பும் ஆய்வு செய்து தகவல்களை வெளியிட்டுள்ளது.
சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சைகள் என 59 பேர் போட்டியிடுகிறார்கள்.

வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின் அடிப்படையில் அவர்களைப் பற்றிய விவரங்களை அறப்போர் இயக்கமும் ஜனநாயக மறு சீரமைப்பு அமைப்பும் ஆய்வு செய்து தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி 59 வேட்பாளர்களில் 4 பேர் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் இதில் சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன் மீதுதான் அதிக கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.



கோடீசுவர வேட்பாளர்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கலைக்கோட்டுதயம் முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.16 கோடி என குறிப்பிடுள்ளார்.

தினகரனின் மொத்த சொத்து மதிப்பு ரூ11.19 கோடி. அவரைத் தொடர்ந்து அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் ரூ.5.18 கோடி சொத்துக்களுடன் 3-வது இடத்தில் உள்ளார். மொத்தம் 7 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்.

அரசியல் கட்சி வேட்பாளர்களில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் கரு.நாகராஜன் ரூ.33 லட்சம் சொத்துக்களுடன் கடைசி இடத்தில் இருக்கிறார்.



சுயேச்சை வேட்பாளர்களில் டி.ரமேஷ் தன்னிடம் ரூ.30 ஆயிரம் மட்டுமே இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒரே ஒரு பெண் வேட்பாளரான புஷ்பாவின் சொத்து மதிப்பு ரூ.10 லட்சம்.

59 வேட்பாளர்களில் 50 பேர் மட்டுமே பான்கார்டு மூலம் சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளனர். 9பேர் சொத்து கணக்கு தாக்கல் செய்யவில்லை.

14 வேட்பாளர்கள் பட்டதாரிகள். 16 பேர் பள்ளி படிப்பை முடித்தவர்கள்.

கடந்த தேர்தலில் 9 கோடீசுவர வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இப்போது 7 பேர் போட்டியிடுகிறார்கள். கடந்த முறை கலைக்கோட்டுதயம் சொத்து மதிப்பு ரூ.14 கோடி என குறிப்பிட்டு இருந்தார். இப்போது ரூ.16 கோடி என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News