செய்திகள்

வங்கி கடன் தொல்லையால் தனியார் ஊழியர் தற்கொலை

Published On 2017-12-11 10:26 GMT   |   Update On 2017-12-11 10:26 GMT
வங்கிகளில் ‘கிரெடிட்கார்டு’ மூலம் பெற்ற கடன் தொல்லையால் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பூர்:

பெரம்பூர் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 36). இவருக்கு திருமணம் ஆகி 7 வருடங்கள் ஆகிறது.

தனியார் நிறுவனத்தில் ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். 3 வருடங்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.

அதன்பிறகு தனியாக வசித்து வந்த அருண்குமார் பணத்தை ஆடம்பரம்பரமாக செலவு செய்து வந்தார். 4 பிரபல வங்கிகளிடம் இருந்து கிரெடிட் கார்டுகள் பெற்று கடன் வாங்கி செலவு செய்தார்.

கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் திணறினார். கடனை திருப்பிச் செலுத்த கோரி வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. வங்கிகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தார்.

இதனால் மனம் உடைந்த அருண்குமார் நேற்று மாலை வீட்டுக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் கிடைத்ததும் திரு.வி.க.நகர் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

வீட்டில் சோதனையிட்டபோது அருண்குமார் எழுதிய கடிதம் சிக்கியது. அதில் கடன் தொல்லை குறித்து அவர் 3 பக்கங்ளில் உருக்கமாக எழுதி இருந்தார்.
Tags:    

Similar News