செய்திகள்

தபால் நிலைய சேமிப்பு கணக்குகளில் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்

Published On 2017-11-30 12:08 GMT   |   Update On 2017-11-30 12:08 GMT
தபால் நிலைய சேமிப்பு கணக்குகளில் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் வருகிற 4-ந் தேதி முதல் அனைத்து அஞ்சலங்களிலும் தொடங்க இருக்கிறது.
தஞ்சாவூர்:

மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி அனைத்து அஞ்சலக சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களும் ஆதார் எண் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை அவர்களது சேமிப்பு கணக்குகளுடன் டிசம்பர் 31-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

இதனை பொருட்டு வருகிற 4-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை அனைத்து அஞ்சலங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களது அஞ்சலக கணக்கு புத்தகம் மற்றும் சுய கையெழுத்திட்ட ஆதார் அட்டையின் நகலுடன் அருகில் உள்ள அஞ்சலகத்தை அணுகி ஆதார் இணைப்பு படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம்.

நேரில் செல்ல இயலாதவர்கள் தங்கள் பகுதிக்குரிய தபால்காரரிடம் ஆதார் இணைப்பு படிவத்தை பெற்று ஆதார் அட்டை மற்றும் அஞ்சலக கணக்கு புத்தகத்தின் நகலில் சுய கையொப்பம் இட்டு அதனை தபால் காரரிடம் கொடுத்து அனுப்பலாம்.

இந்த தகவலை தஞ்சாவூர் கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News