செய்திகள்

அ.தி.மு.க ஆட்சி மன்றக் குழு மாற்றியமைப்பு: முதல்வர் பழனிசாமி, முனுசாமிக்கு இடம்

Published On 2017-11-27 09:39 GMT   |   Update On 2017-11-27 09:39 GMT
அ.தி.மு.க.வில் முக்கிய முடிவுகள் எடுக்கும் ஆட்சி மன்றக் குழு மாற்றியமைக்கப்பட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கே.பி. முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
சென்னை:

அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், அந்த பதவி நீக்கப்பட்டு ஒருங்கினைப்பாளர் மற்றும் இணை ஒருங்கினைப்பாளர் என்ற புதிய பதவிகள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், கட்சியில் வேட்பாளர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்கும் ஆட்சி மன்றக் குழு தலைவராக ஜெயலலிதா இருந்து வந்தார்.

இந்நிலையில், இன்று கூடிய அக்கட்சியின் கூட்டத்தில் ஆட்சி மன்றக் குழு மாற்றியமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கே.பி முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.



மேலும், ஏற்கனெவே குழுவில் இருந்த துணை முதல்வர் ஓ,பன்னீர் செல்வம், மதுசூதனன், தமிழ்மகன் உசைன், பா.வளர்மதி, ஜஸ்டின் செல்வராஜ் மற்றும் டாக்டர் வேணுகோபால் ஆகியோரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
Tags:    

Similar News