செய்திகள்

அவை உரிமைக்குழு நோட்டீஸ் மீதான தடையை நீக்க வேண்டும்: ஐகோர்ட்டில் முதல்வர் தரப்பு வாதம்

Published On 2017-11-16 09:42 GMT   |   Update On 2017-11-16 09:42 GMT
தகுதிநீக்கம், நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான 7 வழக்குகள் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது.
சென்னை:

டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, குட்கா கொண்டு வந்த விவகாரத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியதற்கு விளக்கம் கேட்டு தொடரப்பட்ட வழக்கு, பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரும் வழக்கு, சட்டமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் முதல்வர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்குகள் என 7 வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தமாக விசாரிக்கப்படுகிறது.

இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தகுதி நீக்கம், நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான 7 வழக்குகளில் சில வழக்குகள் விசாரணைக்கு உகந்ததல்ல என அரசு வழக்கிறஞர் வைத்திலிங்கம் வாதிட்டார்.

உரிமைக் குழு நோட்டீஸ் மீதான  தடையை நீக்க வேண்டும். தடை உள்ளதால் அடுத்த கட்டமாக எதுவும் செய்யமுடியவில்லை.

தகுதி நீக்க வழக்கில் இருதரப்பும் வாதங்களை முன்வைக்க குறைந்தது 20 மணி நேரமாவது ஆகும். அவை உரிமைக்குழு தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என முதல்வர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
Tags:    

Similar News