செய்திகள்

பாண்டிச்சேரியில் பஸ் கட்டணம் உயர்வு: நகர பேருந்தின் ஆரம்ப கட்டணம் 5-ல் இருந்து ரூ.7-ஆக உயர்வு

Published On 2017-10-17 13:54 GMT   |   Update On 2017-10-17 13:55 GMT
பாண்டிச்சேரி மாநில அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நகரப் பேருந்தின் ஆரம்ப கட்டண விலை ரூ. 5-ல் இருந்து 7-ஆக உயர்ந்துள்ளது.
பாண்டிச்சேரி மாநிலத்தில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சி நடைபெற்று வருகிறது. நாராயணசாமி தலைமையிலான அரசு பாண்டிச்சேரி மநில அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதன் அறிவிப்பு இன்று வெளியானது.

அதன்படி நகரப் பேருந்தின் ஆரம்ப கட்டணம் ஐந்து ரூபாயில் இருந்து ஏழு ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆரம்ப கட்டணத்திற்குப் பிறகு 3 கி.மீட்டர் தூரத்திற்கு 2 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கட்டணம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.



விரைவு அல்லாத பேருந்துகளில் ரூ.5-ல் இருந்து 8-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு கி.மீட்டருக்கு 40 பைசாவில் இருந்து 70 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது. விரைவுப் பேருந்தில் 50 பைசாவில் இருந்து 90 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News