செய்திகள்

பாரபட்சம் காட்டாமல் அதிகாரிகள் சரியாக நடந்தால் முறைகேடுகள் தடுக்கப்படும்: கவர்னர் கிரண்பேடி கருத்து

Published On 2017-09-21 15:30 GMT   |   Update On 2017-09-21 15:30 GMT
சென்டாக் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. எடுத்த நடவடிக்கை குறித்து கவர்னர் கிரண்பேடி கருத்து வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி:

சென்டாக் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. எடுத்த நடவடிக்கை குறித்து கவர்னர் கிரண்பேடி கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:-

மக்கள் பணியில் இருக்கும் அதிகாரிகள் பாரபட்சம், பயம் இல்லாமல் நடந்திருந்தால் இதுபோன்ற மோசமான தவறுகளை தடுத்திருக்கலாம்.

சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகளும், மேலும் இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தவறான நடைமுறைகளை சுட்டிக்காட்ட தவறியது மட்டும் அல்லாமல், தவறான உத்தரவுகளுக்கு அடிபணிந்து சென்றுள்ளனர். மேலும் இதில் பொய் சொல்லி இருக்கிறார்கள்.

சி.பி.ஐ. விசாரணை இதோடு முடிந்துவிடப் போவதில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உண்மையை சொல்வதற்கு வாய்ப்பு உள்ளது.

அப்போது தங்களுக்கு யார் இந்த தவறுக்கான உத்தரவுகளை பிறப்பித்தார்கள் என்பதை தெரிவிப்பார்கள்.

சி.பி.ஐ. நடவடிக்கை மூலமாக மருத்துவ மாணவர் சேர்க்கையில் நடந்து வந்த பெரிய முறைகேடுக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.

துஷ்பிரயேக சக்திகள் நடவடிக்கைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முறையாக தேர்வு நடக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தவறு நடந்தால் அதை சி.பி.ஐ. கண்காணிக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News