செய்திகள்

எண்ணூர் அருகே எண்ணை கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு பெற்றுத்தரப்படும்: அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2017-07-31 08:52 GMT   |   Update On 2017-07-31 08:52 GMT
எண்ணூர் அருகே எண்ணை கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு பெற்றுத்தரப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

பொன்னேரி:

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகத்தின் 2017-18ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை மீன்வள அறிவியல் மற்றும் இளநிலை மீன்வள பொறியியல் பட்டபடிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பொன்னேரி மீன்வள கல்லூரியில் 2 நாட்களாக நடந்தன.

கலந்தாய்வு முடிவில் மீன் வள கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான உத்தரவுகளை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவொற்றியூரில் பாலம் திறக்கப்பட்ட போது தமிழ் தாய் வாழ்த்து, நாட்டுப்பண் பாடப்படாதது பெரிய வி‌ஷயமில்லை, அதில் மரபு மீறப்படவில்லை. ஆந்திர மீனவர்கள் தமிழக கடல் பகுதியில் மீன் பிடிக்கும் விவகாரத்தில் இரு மாநில மீன்வள துறை அதிகாரி களும் பேசி, நட வடிக்கை எடுக்கப் படும்

எண்ணூர் அருகே கச்சா எண்ணெய் கசிவினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்களுக்கு பேச்சு வார்த்தை மூலம் சுமூக தீர்வு காணப்பட்டு இழப்பீடு பெற்றுத்தரப்படும்.

தமிழகத்தை சூறையாடியது தி.மு.க. ஆட்சி தான். தமிழக மக்களுக்கு பட்டை நாமம் போட்ட தி.மு.க.வினர் அ.தி. மு.க.வை பார்த்து சர்க்கஸ் கூடாரம் என கூறுவது வேடிக்கையாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News