செய்திகள்

சசிகலாவுக்கு சலுகை விவகாரம்: விசாரணைக்கு பிறகு உண்மை தெரியும்- முதலமைச்சர்

Published On 2017-07-25 06:25 GMT   |   Update On 2017-07-25 06:25 GMT
சசிகலாவுக்கு ஜெயலில் சலுகை வழங்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணைக்கு பிறகு உண்மை தெரியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை:

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார ஜெயிலில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

ஜெயிலுக்குள் சசிகலாவுக்கு பல்வேறு சலுகைகள் செய்து கொடுத்துள்ளதை பெண் போலீஸ் அதிகாரி ரூபா வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.

இந்த விவகாரத்தில் சிறைத்துறை டி.ஜி.பி. சத்யநாராயணா மீது ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந்த பிரச்சனையில் இதுவரை தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து எதுவும் கூறவில்லை.

இந்த நிலையில் ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றுள்ள முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இதுபற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:-

எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்த கர்நாடக முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்குப் பிறகுதான் உண்மை தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News