செய்திகள்

சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில், தீபா பேரவை வக்கீல் திடீர் போராட்டம்

Published On 2017-06-21 10:58 GMT   |   Update On 2017-06-21 10:58 GMT
உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி கிடைக்காததால், தீபா பேரவை வக்கீல் ஒருவர் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சென்னை:

போயஸ் கார்டனில் தீபா நுழைந்தது குறித்து அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்த நாஞ்சில் சம்பத் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. தீபா அணி சார்பில் வருகிற 25-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நுங்கம்பாக்கம் வள்ளூவர் கோட்டம் அருகில் உண்ணாவிரதம் இருப்பதற்கு அனுமதி கேட்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் மனுவும் அளிக்கப்பட்டது. ஆனால் போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

தீபா அணியின் உயர்மட்ட உறுப்பினரான வக்கீல் தொண்டன் சுப்பிரமணியம் தலைமையில் நடக்கும் இந்த போராட்டத்தை தலைமை செய்தி தொடர்பாளர் வக்கீல் பசும்பொன் பாண்டியன் தொடங்கி வைக்கிறார்.

போலீசார் அனுமதி மறுத்ததை கண்டித்து வக்கீல் தொண்டன் சுப்பிரமணியம் இன்று காலை கமி‌ஷனர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார். பொதுமக்கள் புகார் அளிக்க செல்லும் நுழைவு வாயிலில் அமர்ந்து அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து போலீசார் அவரை சமாதானம் செய்து கமி‌ஷனர் அலுவலகத்துக்குள் அழைத்துச் சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Tags:    

Similar News