செய்திகள்

சட்டசபையில் நாராயணசாமிக்கு வாழ்த்து

Published On 2017-05-29 14:42 GMT   |   Update On 2017-05-29 14:42 GMT
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு நாளை 70-வது பிறந்த நாளாகும். அவருக்கு சபாநாயகர் வைத்திலிங்கம் வாழ்த்து தெரிவித்தார்.
புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் இன்று சபாநாயகர் வைத்திலிங்கம் பேசியதாவது:-

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு நாளை 70-வது பிறந்த நாளாகும். மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் நாராயணசாமி பாடுபட்டு வருகிறார். அவருக்கு சட்டப்பேரவை சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

அதோடு புதுவை கவர்னராக கிரண்பேடி பொறுப்பேற்று 2-ம் ஆண்டு தொடங்குகிறது. அவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.

கவர்னர் புதுவை மாநில வளரச்சிக்கு உறுதுணையாக இருப்பார் என நம்புகிறோம்.

இவ்வாறு சபாநாயகர் வைத்திலிங்கம் பேசினார்.
Tags:    

Similar News