செய்திகள்

முதல் முறையாக 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு மொபைல்அப்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

Published On 2017-05-27 07:39 GMT   |   Update On 2017-05-27 08:21 GMT
முதல் முறையாக 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு மொபைல்அப் தொடங்கி வைக்கப்படவுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை:

தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் அமைந்துள்ள 108-ன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர், 32 மாவட்டங்களில் இருந்து சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பேசியதாவது:-

புரட்சித் தலைவி அம்மாவின் அரசு திறமை மற்றும் ஆற்றல் வாய்ந்த அவசர மருத்துவ சேவை வழங்க 108 அவசர கால ஊர்தி சேவையை உறுதி செய்துள்ளது. மாதத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்பெற்று வருகின்றனர்.

மேலும் 108 சேவை மையத்தை தொடர்பு கொண்டு விபத்து நடைபெற்ற இடத்தை தெரிவிக்கும்போது ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டு பிரதியேகமாக கைப்பேசி செயலி (மொபைல் அப்) உருவாக்கப்பட்டு நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இச்சேவையை முதல்-அமைச்சரால் விரைவில் துவக்கி வைக்கப்பட உள்ளது.


இந்த கைப்பேசி செயலி செயல்படுத்தப்பட்ட பின் 108 சேவையை தொடர்பு கொள்ளும்போது தொடர்பு கொள்பவர் இருக்கும் இடத்தின் முழு முகவரியும் சேவை மையத்திற்கு தெரியவரும். இதனால் சேவை மையத்தில் சரியான முகவரியை கேட்டு கால தாமதம் ஆவது தவிர்க்கப்படும்.

Tags:    

Similar News