செய்திகள்

ஜமாபந்தி நிறைவுநாள் விழாவில் 197 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Published On 2017-05-25 17:24 GMT   |   Update On 2017-05-25 17:24 GMT
கீழ்பென்னாத்தூரில் ஜமாபந்தி நிறைவுநாள் விழாவில் 197 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா மகேஸ்வரி வழங்கினார்.
கீழ்பென்னாத்தூர்:

கீழ்பென்னாத்தூரில் நடந்த ஜமாபந்தி நிறைவு நாள் விழாவில் 197 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை திருவண்ணாமலை உதவி கலெக்டரும், ஜமாபந்தி அலுவலருமான உமாமகேஸ்வரி வழங்கினார்.

கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் கீழ்பென்னாத்தூர், வேட்டவலம், சோமாசிபாடி ஆகிய உள்வட்டங்களுக்கான ஜமாபந்தி கடந்த 3 நாட்கள் நடந்தது. ஜமாபந்தியின்போது பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை உதவி கலெக்டரும், ஜமாபந்தி அலுவலருமான உமாமகேஸ்வரியிடம் வழங்கினார்கள்.

ஜமாபந்தி நிறைவுநாள் மற்றும் விவசாயிகள் மாநாடு நேற்று நடந்தது. திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுப்பிரமணியன், வட்ட வழங்கல் அலுவலர் செல்வராஜ், துணை தாசில்தார் வெங்கடேசன், நில அளவையர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் ஜெ.சுகுணா வரவேற்றார்.

விழாவில் கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டு, 197 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா உட்பிரிவு, பெயர் மாற்றுதல், இருளர் சான்று, பிறப்பு சான்று, நத்தம் சிட்டா, ஸ்மார்ட் கார்டு மற்றும் கால்நடைத்துறை, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினர்.

இதில் பேரூராட்சி செயல் அலுவலர் மோகன், வருவாய் ஆய்வாளர்கள் தனபால், கலையரசி, பொன்விழி, விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணி நன்றி கூறினார்.
Tags:    

Similar News