செய்திகள்

திருவாரூர் தேரோடும் வீதியில் மரக்கிளைகள் அகற்றம்: கலெக்டர் ஆய்வு

Published On 2017-05-23 17:55 GMT   |   Update On 2017-05-23 17:55 GMT
திருவாரூர் தியாகராஜர் சுவாமி ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு தேரோடும் 4 வீதிகளிலும் உள்ள மரக்கிளைகளை அகற்றும் பணிகளை மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவாரூர்:

தியாகராஜர் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி வருகிற 28-ந்தேதி காலை 6 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடக்கிறது. 29-ந்தேதி காலை 7 மணிக்கு அம்பாள், சண்டிகேஸ்வரர் தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடக்கிறது.

ஆழித்தேரோட்டத்தில் பக்தர்கள் கலந்து கொள்ள ஏதுவாக போக்குவரத்து, சாலை பாதுகாப்பு, தேரோட்டத்திற்கு ஏதுவாக 4 வீதிகளையும் பார்வையிட்டு சாலையின் இருபுறங்களிலும் இடையூராக உள்ள மரக்கிளைகள் உள்ளிட்ட வைகளை அகற்றும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சக்திமணி, வருவாய் கோட்டாட்சியர் முத்துமீனாட்சி, செயல் அலுவலர் இளையராஜா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News