செய்திகள்

கரூர் பகுதியில் மயில்களால் விவசாய பயிர்கள் நாசம்: வனத்துறை நடவடிக்கை எடுக்குமா?

Published On 2017-05-22 15:29 GMT   |   Update On 2017-05-22 15:29 GMT
கரூர் பகுதியில் விவசாய பயிர்களை மயில்கள் நாசம் செய்வதால் நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலாயுதம்பாளையம்:

கரூர் அருகே நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் நெல், சோளம், கம்பு, மக்காச்சோளம், மர வள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு பணப்பயிர்களை பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர் மட்டம்  மிகவும்  குறைவாக  இருப்பதால் காவிரி ஆறு மற்றும் புகழூர் வாய்க்காலில்  தண்ணீர் திறந்து விடபடவில்லை.

இதனால் சுற்றுவட்டார பகுதி கிணறுகளில் தண்ணீர் மிகவும் குறைந்த அளவே இருப்பதால் விவசாயிகள் பயிரிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் தண்ணீரின்றி பயிரிட்டுள்ள நெல், சோளம்,கம்பு, மக்காச்சோளம், மரவள்ளிக் கிழங்கு உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் காய்ந்து கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

விவசாயிகள் குறைந்த  அளவே நீரை வைத்து பயிர்களை காப்பாற்றி வருகின்றனர். இந்நிலையில் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மயில்கள்  மற்றும் பறவைகள் விவசாய நிலத்தில் உள்ள விளை பொருட்களை சேதபடுத்தி வீணடித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே வனத்துறையினர் இப்பகுதியில் சுற்றி திரியும் மயில்களை பிடித்து வனப்பகுதியில் விட்டு விளைப்பொருட்களை காப்பாற்ற வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News