search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மயில்கள்"

    • ளைநிலங்களில் வலம் வரும் மயில்களை தடுக்க, மருந்து, விஷம் வைக்கும் பணியில் சிலர் ஈடுபடுகின்றனர்.
    • மாவட்டத்தில் மயில்கள் சுற்றித்திரியும் புதர்காடுகள் மற்றும் பரந்த நிலப்பரப்புகள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றன.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, பல்லடம், தாராபுரம், அவிநாசி, ஊத்துக்குளி போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் மயில்கள் பரவலாக காணப்படுகின்றன. அவ்வப்போது இறைச்சி மற்றும் தோகைக்காக, மயில்கள் வேட்டை யாடப்பட்டு வந்தது. இந்நிலையில் விளைநிலங்களில் வலம் வரும் மயில்களை தடுக்க, மருந்து, விஷம் வைக்கும் பணியில் சிலர் ஈடுபடுகின்றனர். எனவே, மயில்களால் இடையூறு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து, அந்த இடத்தில் சேதத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். காரணம், மயில்கள் ஆண்டு முழுவதும் விளைநிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்துவது கிடையாது. மாறாக, நாற்று நடும் காலம், விதைப்பு காலம் அல்லது அறுவடை காலம் எப்போது என்பதை தெரிந்து, மயில்களை விரட்டும் முயற்சியை துரிதப்படுத்த வேண்டும்.

    இது குறித்து தன்னார்வலர்கள் கூறும்போது, மாவட்டத்தில் மயில்கள் சுற்றித்திரியும் புதர்காடுகள் மற்றும் பரந்த நிலப்பரப்புகள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றன. மயில்களின் வாழ்விடங்கள் அழிக்கப்படுவதால், எஞ்சிய பாதுகாக்கப்பட்ட வனங்கள், விளைநிலங்களில் மட்டுமே, அவை காணப்படுகின்றன. வனத்துறையினர், தன்னார்வலர்களை உள்ளடக்கிய கண்காணிப்பு குழு அமைத்தோ, மயில் காப்பாளர் எனும் புதிய பணியிடத்தை உருவாக்கியோ, அவைகளை பாதுகாக்க முன் வர வேண்டும். அப்போது தான், வேளாண் பயிர் சாகுபடியையும் பாதுகாக்க முடியம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பாபநாசம், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் மயில்கள் அதிக அளவில் உள்ளன.
    • டெல்டா பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மயில்கள் காணப்படுகின்றன.

    பாபநாசம்:

    தமிழகத்தில் விராலிமலை, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் மயில்கள் அதிகமாக காணப்படு கின்றன.

    தற்போது டெல்டா மாவட்டமான தஞ்சாவூர், திருவாரூர் பகுதிகளில் மயில்கள் அதிக அளவில் காணப்படுகிறது.

    குறிப்பாக தஞ்சை மாவட்டம் பாபநாசம், கும்பகோணம், வலங்கைமான், திருமானூரில் இருந்து அணைக்கரை வரை உள்ள கொள்ளிட கரை ஆகிய பகுதிகளில் மயில்கள் அதிக அளவில் உள்ளன.

    கர்நாடகா மாநிலத்தில் பங்குபூர், ஆதிசிந்தனகிரியிலும், மராட்டிய மாநிலத்தில் நெய்கானிலும் மயில்கள் சரணாலயம் அமைந்துள்ளன.

    இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், பாபநாசம், கும்பகோணம், வலங்கைமான், குடவாசல் பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகின்றன.

    மயிலுக்கு நெல் மிகவும் பிடித்தமான உணவு.

    இவை மற்ற பறவைகளைப் போல சட்டென்று வேகமாக பறந்து செல்லாது. டெல்டா பகுதியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மயில்கள் காணப்படுகின்றன.

    மேலும், மயில்களை பொருத்த வரை குடியிருப்பு பகுதிகளை ஒட்டியுள்ள காடுகளில் அதிகம் காணப்படுகின்றன.

    இவை உணவு மற்றும் குடிநீா்த் தேடி விவசாய தோட்டத்திற்கும் குடியிருப்புப் பகுதிக்குள் செல்லும் மயில்கள் சாலையைக் கடக்கும்போது வாகனங்கள் மோதியும் உயிரிழக்கின்றன.

    இது போன்று அழிந்து வரும் மயில் இனத்தை பாதுகாக்க தஞ்சை மாவட்டத்தில் உள்ள மயில்களை கணக்கெடுத்து, மயில்கள் அதிக அளவு காணப்படும் பாபநாசம் பகுதியில் சரணாலயம் அமைக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்களும், இப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விவசாய நிலம் ராயணம்பட்டி அருகே உள்ள வையாபுரி காட்டுவளவு என்னும் பகுதியில் உள்ளது.
    • அவரது வயலில் 2 மயில்கள் இறந்து கிடப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் கொங்கணா புரம் போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, கோரணம் பட்டி ஊராட்சி, ராயணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சித்தன் (வயது 50).

    இவருக்கு சொந்தமான விவசாய நிலம் ராயணம்பட்டி அருகே உள்ள வையாபுரி காட்டுவளவு என்னும் பகுதியில் உள்ளது. அதில் சித்தன் ராகி பயிர் சாகுபடி செய்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை அவரது வயலில் 2 மயில்கள் இறந்து கிடப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் கொங்கணா புரம் போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மயில்களின் உடல்களை கைப்பற்றினர்.

    சித்தன் ராகி வயலில் பூச்சிக்கொல்லி மருந்து வைத்த நிலையில், அவற்றை சாப்பிட்ட மயில்கள் உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில், விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா என்றும் விசாரணை நடக்கிறது.

    விவசாய நிலத்தில் மயில்கள் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வயலில் 2 பெண் மயில்கள் மர்மமான முறையில் செத்துக்கிடந்தன.
    • மயில்கள் எப்படி இறந்தன ? என்பது குறித்து வனத்துறையினரும், போலீசாரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பிரம்மதேசத்தை சேர்ந்தவர் மணிவேல்(வயது 75). இவருக்கு சொந்தமான வயலில் நேற்று முன்தினம் மதியம் 2 பெண் மயில்கள் மர்மமான முறையில் செத்துக்கிடந்தன. இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து உடனடியாக மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், இறந்து கிடந்த மயில்களை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள், அவற்றை வாலிகண்டபுரம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் கால்நடை டாக்டர் மூலம் மயில்கள் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் வனப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. மயில்கள் எப்படி ெசத்தன? என்பது குறித்து வனத்துறையினரும், போலீசாரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • வண்ணார்காடு பகுதியில், நேற்று விவசாயநிலத்தில் 2 ஆண்மயில் மற்றும் 2 பெண்மயில் என நான்கு மயில்கள் உயிரிழந்து கிடந்தது.
    • மேலும் ஒரே நேரத்தில் 4 மயில்கள் உயிரிழந்ததால், அப்பகுதியில் உள்ள யாரேனும் மயில்களுக்கு விஷம்வைத்து கொன்றார்களா?

    எடப்பாடி:

    எடப்பாடி அடுத்த குரும்பபட்டி ஊராட்சிக்குட்பட்ட, நாச்சியூர் அடுத்த வண்ணார்காடு பகுதியில், நேற்று விவசாயநிலத்தில் 2 ஆண்மயில் மற்றும் 2 பெண்மயில் என நான்கு மயில்கள் உயிரிழந்து கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அலுவலர்கள், மயில்களின் உடலினை கைப்பற்றி , கொங்கணாபுரம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலும் ஒரே நேரத்தில் 4 மயில்கள் உயிரிழந்ததால், அப்பகுதியில் உள்ள யாரேனும் மயில்களுக்கு விஷம்வைத்து கொன்றார்களா? மேலும் புதர்பகுதியில் மயில்கள் இறந்து கிடக்கின்றனவா? என வனவர் குமரேசன் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    தேசியபறவையான மயில்கள் மர்மமான முறையில் இறந்துகிடந்த நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    செங்கப்பள்ளி கிராமம் பள்ளபாளையத்தில் 140 ஏக்கர் பரப்பளவு உள்ள குளத்தில் அதிக அளவு கருவேல மரங்கள் உள்ளன.
    உடுமலை:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் உடுமலை அமராவதி நகர் பகுதி விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    உடுமலை தாலுகா ஆண்டிய கவுண்டனூர் அருகே ஜம்புகல் கரடு மலை 2,500 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த மலையில் மண்பாங்கான இடத்தில் 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் விவசாயம் செய்ய கடந்த தி.மு.க. ஆட்சியின்போது பல்வேறு சமுதாய மக்களுக்கும் பட்டா வழங்கப்பட்டது. இங்கு மக்கள் விவசாயம் செய்து வந்தனர்.

    இந்தநிலையில் தனியார் ஒருவர் மலைப்பாதையை ஆக்கிரமித்து கம்பிவேலி அமைத்து மற்நவர்கள் தங்கள் நிலத்துக்கு செல்ல முடியாதபடி செய்து விட்டனர். ஜம்புகல் மலை முழுவதையும் மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி முறையற்ற வகையில் எழுதி வாங்கியுள்ளனர். 

    ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் கிணறு தோண்டுவது, ஆழ்குழாய் கிணறு அமைப்பது, மரங்களை வெட்டுவது என்று தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார்கள். எனவே நிலங்களை மீட்டு மலை வாழ் மக்களுக்கும், ஏழை விவசாயிகளுக்கும் பட்டா வழங்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் அளித்த மனுவில், மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்க ளிலும் கடும் உரத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. மக்காச்சோளம், வாழை, காய்கறி பயிர்கள் உள்ளிட்ட பயிர்களுக்கு உரம் அவசியமாக உள்ள நிலையில் யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் ஆகிய உரங்கள் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு இல்லை என தெரிவிக்கிறார்கள்.

    இந்தநிலையை பயன்படுத்தி தனியார் உர விற்பனை நிலையங்களில் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் தேவையான உரங்களை இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்குவதற்கும், தனியார் உர விற்பனை நிலையங்களை கண்காணித்து அரசு நிர்ணயித்த விலையில் உரம் கிடைப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
     
    தமிழ்நாடு விவசாயிகள் சங்க  ஊத்துக்குளி நிர்வாகிகள் கொடுத்த மனுவில், தெற்கு அவிநாசிபாளையம் கிராமத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இதுவரை இருமுனை மின்சாரம் வழங்கப்பட்டது. சிறு, குறு விவசாயிகள் அதிக அளவு உள்ளனர். மின்மோட்டார் மூலம் பாசனம் செய்து வருகின்றனர். அடிக்கடி மின் மோட்டார் பழுதாவதால், மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.

    செங்கப்பள்ளி கிராமம் பள்ளபாளையத்தில் 140 ஏக்கர் பரப்பளவு உள்ள குளத்தில் அதிக அளவு கருவேல மரங்கள் உள்ளன. பொதுப்பணித்துறையின் குளத்தில் உள்ள கருவேலமரங்களை அகற்றி பொது அமைப்பு சார்பில் குளம் தூர்வாரப்பட்டது.மதகு பகுதியில் தூர்வாரவில்லை. அந்த இடத்தில் தூர்வாரி கரைகளை வலுப்படுத்த வேண்டும்.

    முதல்வர் அறிவித்தபடி 5 சவரன் வரையிலான, நகைக்கடனை தள்ளுபடி செய்து நகைகளை திரும்ப வழங்க வேண்டும். தேசிய பறவையான மயில்கள் பெருக்கம் அதிகரித்துள்ளது. விவசாய நிலங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்துவதால்  மயில்களை பிடித்து  வனப்பகுதியில் விட வேண்டும்.இவ்வாறு  விவசாயிகள் மனுவில் வலியுறுத்தி உள்ளனர்.
    ×