search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயில்கள்
    X
    மயில்கள்

    பயிர்கள் சேதத்தை தவிர்க்க மயில்களை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

    செங்கப்பள்ளி கிராமம் பள்ளபாளையத்தில் 140 ஏக்கர் பரப்பளவு உள்ள குளத்தில் அதிக அளவு கருவேல மரங்கள் உள்ளன.
    உடுமலை:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் உடுமலை அமராவதி நகர் பகுதி விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    உடுமலை தாலுகா ஆண்டிய கவுண்டனூர் அருகே ஜம்புகல் கரடு மலை 2,500 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த மலையில் மண்பாங்கான இடத்தில் 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் விவசாயம் செய்ய கடந்த தி.மு.க. ஆட்சியின்போது பல்வேறு சமுதாய மக்களுக்கும் பட்டா வழங்கப்பட்டது. இங்கு மக்கள் விவசாயம் செய்து வந்தனர்.

    இந்தநிலையில் தனியார் ஒருவர் மலைப்பாதையை ஆக்கிரமித்து கம்பிவேலி அமைத்து மற்நவர்கள் தங்கள் நிலத்துக்கு செல்ல முடியாதபடி செய்து விட்டனர். ஜம்புகல் மலை முழுவதையும் மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி முறையற்ற வகையில் எழுதி வாங்கியுள்ளனர். 

    ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் கிணறு தோண்டுவது, ஆழ்குழாய் கிணறு அமைப்பது, மரங்களை வெட்டுவது என்று தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார்கள். எனவே நிலங்களை மீட்டு மலை வாழ் மக்களுக்கும், ஏழை விவசாயிகளுக்கும் பட்டா வழங்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் அளித்த மனுவில், மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்க ளிலும் கடும் உரத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. மக்காச்சோளம், வாழை, காய்கறி பயிர்கள் உள்ளிட்ட பயிர்களுக்கு உரம் அவசியமாக உள்ள நிலையில் யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் ஆகிய உரங்கள் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு இல்லை என தெரிவிக்கிறார்கள்.

    இந்தநிலையை பயன்படுத்தி தனியார் உர விற்பனை நிலையங்களில் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் தேவையான உரங்களை இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்குவதற்கும், தனியார் உர விற்பனை நிலையங்களை கண்காணித்து அரசு நிர்ணயித்த விலையில் உரம் கிடைப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
     
    தமிழ்நாடு விவசாயிகள் சங்க  ஊத்துக்குளி நிர்வாகிகள் கொடுத்த மனுவில், தெற்கு அவிநாசிபாளையம் கிராமத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இதுவரை இருமுனை மின்சாரம் வழங்கப்பட்டது. சிறு, குறு விவசாயிகள் அதிக அளவு உள்ளனர். மின்மோட்டார் மூலம் பாசனம் செய்து வருகின்றனர். அடிக்கடி மின் மோட்டார் பழுதாவதால், மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.

    செங்கப்பள்ளி கிராமம் பள்ளபாளையத்தில் 140 ஏக்கர் பரப்பளவு உள்ள குளத்தில் அதிக அளவு கருவேல மரங்கள் உள்ளன. பொதுப்பணித்துறையின் குளத்தில் உள்ள கருவேலமரங்களை அகற்றி பொது அமைப்பு சார்பில் குளம் தூர்வாரப்பட்டது.மதகு பகுதியில் தூர்வாரவில்லை. அந்த இடத்தில் தூர்வாரி கரைகளை வலுப்படுத்த வேண்டும்.

    முதல்வர் அறிவித்தபடி 5 சவரன் வரையிலான, நகைக்கடனை தள்ளுபடி செய்து நகைகளை திரும்ப வழங்க வேண்டும். தேசிய பறவையான மயில்கள் பெருக்கம் அதிகரித்துள்ளது. விவசாய நிலங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்துவதால்  மயில்களை பிடித்து  வனப்பகுதியில் விட வேண்டும்.இவ்வாறு  விவசாயிகள் மனுவில் வலியுறுத்தி உள்ளனர்.
    Next Story
    ×