செய்திகள்

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் வாயில் கருப்பு துணி கட்டி டாக்டர்கள் போராட்டம்

Published On 2017-04-26 12:29 GMT   |   Update On 2017-04-26 12:29 GMT
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கருப்பு உடை அணிந்து வாயில் கருப்பு துணி கட்டி இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்:

அரசு மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பு படிக்க வழங்கி வந்த 50 சதவீத இட ஒதுக்கீடை ரத்து செய்யக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் கடந்த ஒரு வாரமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் இன்று 8-வது நாளாக போராட்டம் நடந்தது. போராட்டத்தில் கலந்து கொண்ட டாக்டர்கள் அனைவரும் கருப்பு உடை அணிந்து வாயில் கருப்பு துணி கட்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பங்கேற்றனர்.

அரசு மருத்துவர்கள் சங்க மாநில இணைச் செயலாளர் சீனிவாசன் இது குறித்து தெரிவிக்கையில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஒரு வாரமாக உள்ளிருப்பு, விடுப்பு போராட்டம், உண்ணாவிரதம் என்று பல போராட்டங்களை அரசு டாக்டர்கள் நடத்தியும் எங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

இதனால் இன்று 8-வது நாளாக வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

தமிழக அரசு எங்கள் கோரிக்கையை சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

கோரிக்கை நிறைவேற்றப் படாவிட்டால் எங்கள் போராட்டம் தொடரும். இதனால் டாக்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

Similar News