செய்திகள்

இணைப்பு முயற்சி: எடப்பாடி பழனிச்சாமி- ஓ.பி.எஸ். தனித்தனியாக ஆலோசனை

Published On 2017-04-24 10:05 GMT   |   Update On 2017-04-24 10:05 GMT
அ.தி.மு.க.வில் பிளவுபட்டுள்ள இரு அணிகளையும் இணைப்பது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
சென்னை:

அ.தி.மு.க.வில் பிளவுபட்டுள்ள இரு அணிகளையும் இணைக்கும் முயற்சி இன்று நடக்கிறது.

ஓ . பன்னீர்செல்வம் அணியையும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணியையும் இணைக்கும் முதல்கட்ட பேச்சுவார்த்தை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடக்கிறது.

இந்த நிலையில் இணைப்பு முயற்சி தொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை கட்சி நிர்வாகிகளுடன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செய்தி தொடர்பாளரான, வைகை செல்வன் ஆகியோர் பங்கேற்றனர். ஓ.பி.எஸ். அணியினர் விதிக்கும் நிபந்தனை தொடர்பாக அவர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி விவாதித்தார்.

அமைச்சர்கள் பதவி, கட்சி பதவிகள் உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதே போல ஓ. பன்னீர் செல்வமும் இன்று காலை தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

வீனஸ் காலனியில் உள்ள தனது இல்லத்தில் அவர் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில் கே.பி.முனுசாமி, மைத்ரேயன், செம்மலை, மனோஜ் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் பேச்சுவார்த்தையில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள் பற்றி ஓ. பன்னீர்செல்வம் ஆலோசித்தார்.

Similar News