செய்திகள்

கருங்கல் அருகே இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர்-மாமனார் கைது

Published On 2017-04-22 11:31 GMT   |   Update On 2017-04-22 11:31 GMT
இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் மற்றும் மாமனாரை போலீசார் கைது செய்து இரணியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

நாகர்கோவில்:

கருங்கல் அருகே கிள்ளியூர் களப்பாறவிளையை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகள் சுமிதாமோள் (வயது 19). இவருக்கும் கருங்கல் அருகே இளவுவிளையை சேர்ந்த தங்கையன் மகன் ஷிஜின் (27) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 15 பவுன் நகையும், 1½ லட்சம் வரதட்சணையாக வழங்கப்பட்டது.

இந்தநிலையில் கடந்த 16-ந்தேதி சுமிதா மோலுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறி மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுமிதாமோள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த தகவல் சுமிதா மோளின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி தங்கராஜ் கருங்கல் போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து போலீசார் சுமிதாமோளின் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனையில் சுமிதாமோள் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

திருமணம் ஆன 2 மாதத்தில் சுமிதாமோள் இறந்ததால் பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொண்டார். இதை தொடர்ந்து சுமிதாமோளின் கணவர் ஷிஜின் மற்றும் அவரது தந்தை தங்கையன் ஆகியோர் சுமிதாமோளை தற்கொலைக்கு தூண்டி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ஷிஜின், தங்கையன் இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் இரணியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். பின்னர் போலீசார் இருவரையும் நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

Similar News