செய்திகள்

மாம்பலம் போலீஸ் நிலையத்தில் தீபா மீது மோசடி புகார்

Published On 2017-04-21 05:52 GMT   |   Update On 2017-04-21 05:52 GMT
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையைச் சேர்ந்தவர்கள் மாம்பலம் போலீஸ் நிலையத்தில் தீபா மீது மோசடி புகார் அளித்துள்ளார். புகார் குறித்து மாம்பலம் போலீஸ் உதவி கமி‌ஷனர் செல்வம் விசாரணை நடத்தி வருகிறார்.
சென்னை:

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது அண்ணன் மகள் தீபா எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்கிற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் அவர் போட்டியிட்டார்.

தீபா பேரவையை நிர்வகிப்பதில் தீபாவுக்கும், அவரது கணவர் மாதவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர்கள் சில நாட்கள் பிரிந்து இருந்தனர்.

ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தான பிறகு இருவரும் இணைந்தனர். அதன் பின்னரும் அவர்களுக்குள் மோதல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் தீபா பேரவையைச் சேர்ந்த நெசப்பாக்கம் ஜானகிராமன் என்பவர் மாம்பலம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையை பதிவு செய்யாமலேயே அதற்கு உறுப்பினர்களை தீபா சேர்த்து வருகிறார். இதற்காக விண்ணப்ப படிவங்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.


ஒரு விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.10 ஆகும். நான் ரூ. 5ஆயிரம் கொடுத்து 50 ஆயிரம் விண்ணப்ப படிவங்களை வாங்கி உள்ளேன்.

அமைப்பை பதிவு செய்யாமல் இதுபோன்று விண்ணப்ப படிவத்தை விற்பனை செய்து தீபா மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை போல பலரும் விண்ணப்ப படிவங்களை வாங்கி சென்றுள்ளனர்.

இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் வசூலாகி இருக்கும். இதுபற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி மாம்பலம் போலீஸ் உதவி கமி‌ஷனர் செல்வம் விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News