செய்திகள்

முதல்வர்-சட்டசபை செயலாளருடன் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு

Published On 2017-04-20 09:55 GMT   |   Update On 2017-04-20 09:55 GMT
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று மதியம் 1 மணிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து பேசினார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று மதியம் 1 மணிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து பேசினார். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை மற்றும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சரை சந்தித்து சென்ற நிலையில் விஜய பாஸ்கரும் சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் முதல்-அமைச்சரை சந்தித்த பிறகு சட்டசபை செயலாளர் ஜமாலுதீனையும் அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து பேசினார். இதுபற்றி விஜயபாஸ்கரிடம் கேட்டபோது, நுழைவு தேர்வு பற்றி விவாதித்ததாக தெரிவித்தார்.

Similar News