செய்திகள்

தமிழகத்துக்கு முழுநேர கவர்னரை நியமிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

Published On 2017-04-20 05:03 GMT   |   Update On 2017-04-20 05:04 GMT
தமிழகத்துக்கு முழுநேர கவர்னரை நியமிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒரு மாநிலத்திற்கு கவர்னரின் பணி மிக மிக அவசியம். இதற்கு எந்த ஒரு மாநிலத்திற்கும் முழு நேர கவர்னர் தேவை. அப்போது தான் அந்த மாநிலத்தில் கவர்னருக்கு உட்பட்டு நடைபெற வேண்டிய நடவடிக்கைகள், செயல்பாடுகள் தங்கு தடையின்றி உரிய நேரத்தில் நடைபெறும். குறிப்பாக தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு மத்திய அரசு இந்த முடிவை விரைந்து எடுக்க வேண்டும்.


மேலும், தமிழகத்தில் கல்வித் துறையை உயர்த்தக்கூடிய பல்கலைக்கழகங்களில் சிலவற்றில் காலியாக உள்ள துணை வேந்தர் பதவி இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது. இப்பதவி உடனடியாக நியமிக்கப்பட வேண்டும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இப்பிரச்சினைக்கு காலம் தாழ்த்தாமல் தீர்வு காணப்பட வேண்டும். இதற்குண்டான அதிகாரம் கவர்னருக்கு உள்ளது. எனவே, தமிழகத்தில் கல்வித்துறை, அரசியல் சூழல் போன்ற பலவற்றை மத்திய அரசு கவனத்தில் கொண்டு தமிழகத்திற்கு முழுநேர கவர்னரை இன்னும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நியமனம் செய்ய முன்வர வேண்டும் என்று த.மா.கா. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Similar News