செய்திகள்

புதுவை சட்டசபையில் ரூ.1,481 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நாராயணசாமி

Published On 2017-03-30 07:28 GMT   |   Update On 2017-03-30 07:28 GMT
புதுவை சட்டசபையில் 3 மாத செலவினங்களுக்காக ரூ.1,481 கோடி ஒதுக்கீடு செய்து இடைக்கால பட்ஜெட்டை முதலமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார்.
புதுச்சேரி:

புதுவையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசு ஒதுக்கும் திட்ட நிதியை பொறுத்தே பட்ஜெட் தயாரிப்பது வழக்கம்.

ஆனால், புதுவைக்கான திட்ட நிதியை இதுவரை மத்திய அரசு ஒதுக்கவில்லை.

எனவே, அரசின் 3 மாத செலவுகளுக்கு மட்டும் பணத்தை அனுமதிக்கும் வகையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதற்கான சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது.


முதல்-அமைச்சர் நாராயணசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். 3 மாத செலவினங்களுக்காக ரூ.1481 கோடி ஒதுக்கீடு செய்து பட்ஜெட் தயாரிக்கப்பட்டு இருந்தது. அதில், பல்வேறு திட்டங்களும் அறிவிக்கப்பட்டு இருந்தன.

மத்திய அரசு விரைவில் திட்ட செலவுக்கான நிதி ஒதுக்கீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து அடுத்த மாதம் அல்லது அதற்கு அடுத்த மாதத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News