செய்திகள்

கம்பம் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: கைக்குழந்தையுடன் போலீஸ் நிலையத்தில் பெண்கள் முற்றுகை

Published On 2017-03-23 10:48 GMT   |   Update On 2017-03-23 10:48 GMT
கம்பத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கைக்குழந்தையுடன் பெண்கள் போலீஸ் நிலையத்தில் முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
கம்பம்:

கம்பம் நகராட்சி 4-வது வார்டு மாலையம்மாள்புரத்தில் உள்ள டாஸ்மாக் கடை நெடுஞ்சாலைக்கு அருகில் இருப்பதால் அதனை மாற்ற முடிவு செய்யப்பட்டது.

இதனை அடுத்து மாலையம்மாள்புரம் ஊருக்குள் கடையை மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனை அறிந்ததும் அப்பகுதி பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் கைக்குழந்தையுடன் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். இன்ஸ்பெக்டர் உலக நாதனிடம் அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

இது குறித்து புகார் அளித்த பெண்கள் தெரிவிக்கையில், ஊருக்கு வெளியில் பார் இல்லாமல் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை நீதிமன்ற உத்தரவை அடுத்து தற்போது ஊருக்குள் மாற்ற அதிகாரிகள் முயற்சி எடுத்து வருகின்றனர். இந்த கடையினால் பெண்கள் மற்றும் பள்ளிக்குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஊருக்குள் வந்தால் குடிமகன்கள் தொல்லை மேலும் அதிகரிக்கும்.

எனவே மாலையம்மாள் புரத்துக்குள் கடை வைக்க கூடாது என்று தெரிவித்தனர். இதனையடுத்து உத்தமபாளையம் தாசில்தாரிடமும் அந்த பெண்கள் புகார் மனு அளித்தனர்.

Similar News