செய்திகள்

பாபநாசம் அருகே தீ விபத்தில் வீடுகள் சேதம்

Published On 2017-03-22 17:19 GMT   |   Update On 2017-03-22 17:19 GMT
பாபநாசம் அருகே மின் கசிவு காரணமாக வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டில் இருந்த தளவாடபொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமானது.

பாபநாசம்:

பாபநாசம் தெற்கு வீதி மெயின் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் தங்களது மருத்துவமனையில் உள்ள மருத்துவ கழிவுகளை மருத்துவமனை பின்புறம் மொத்தமாக தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.

அந்த தீயானது மள மளவென எரிந்து அருகில் உள்ள கட்டிடத்திற்கு பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த பாபநாசம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இதுபோன்று மருத்துவ கழிவுகளை கொளுத்தக் கூடாது என மருத்துவமனை நிர்வாகத்தினை எச்சரித்து சென்றனர்.

பாபநாசம் அருகே பசுபதிகோவில் கீழதெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 58) நேற்று இரவு மின்கசிவு காரணமாக திடீரென இவரது வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. தொடர்ந்து அவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் அவரது தம்பி ராஜாராம் வீட்டிற்கும் தீ பரவியது. இது குறித்து பாபநாசம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் வீட்டில் இருந்த தளவாடபொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமானது.

Similar News