செய்திகள்

குமரி மாவட்டத்தில் போலீசார் தொடர் வாகன சோதனை: 1934 பேர் மீது வழக்கு

Published On 2017-03-20 13:48 GMT   |   Update On 2017-03-20 13:48 GMT
குமரி மாவட்டத்தில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 1934 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது எந்த வித தயக்கமும் இன்றி வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி நேற்று குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி ஆகிய சப்- டிவிஷன்களில் விடிய, விடிய வாகனசோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது நாகர்கோவில் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 524 பேர் மீதும்,  தக்கலை பகுதியில் நடந்த  ஹெல்மெட் சோதனையில் 403 பேர் மீதும், குளச்சல் சப்-டிவிஷனில் நடந்த சோதனையில் 536 பேர் மீதும், கன்னியாகுமரியில் நடந்த வாகன சோதனையில் 471 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராத தொகையும் விதித்தனர்.

நேற்று மாவட்டம் முழுவதும் நடந்த வாகன சோதனையில் மொத்தம் 1934 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

Similar News