செய்திகள்

புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சர் சந்திரகாசு மரணம்

Published On 2017-03-08 17:45 GMT   |   Update On 2017-03-08 17:45 GMT
புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சர் மற்றும் சபாநாயகர் சந்திரகாசு இன்று சென்னையில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார்.
சென்னை:

புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சந்திரகாசு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி சந்திரகாசு மரணமடைந்தார்.

64 வயதான சந்திரகாசு புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியின் போது சபாநாயகர் மற்றும் துனை சபாநாயகர் பதவிகளை வகித்துளார். காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொடங்கியபோது, அக்கட்சியில் இணைந்த சந்திரகாசு இருமுறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

சந்திரகாசு-வின் மறைவுக்கு அம்மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Similar News