செய்திகள்

இந்தியன் வங்கிக்கான புதிய நிர்வாக இயக்குனர் நியமனம்

Published On 2017-02-24 22:50 GMT   |   Update On 2017-02-24 22:50 GMT
இந்தியன் வங்கிக்கான புதிய நிர்வாக இயக்குனராக எம்.கே. பட்டாச்சாரியா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை:

இந்தியன் வங்கிக்கான புதிய நிர்வாக இயக்குனராக எம்.கே. பட்டாச்சாரியா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இவர் இதற்கு முன் ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் வங்கியின் தலைமை பொது மேலாளராகவும் தலைமை இடர் மேலாண்மை அலுவலராகவும் பணி புரிந்து வந்தார். கூடுதலாக சில்லரை வங்கி சேவைகள், வங்கி உத்திகள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கி சேவை போன்ற பொறுப்புகளையும் கவனித்து வந்தார்.

ஸ்டேட் பாங்க் ஆப் மைசூரு வங்கியில் 1985-ம் ஆண்டில் தகுதிகாண் நிலை அலுவலராக பணியை தொடங்குவதற்கு முன்னர், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் பல்வேறு நிலைகளில் தலைமை பொறுப்பில் பணியாற்றி உள்ளார்.

வங்கி பணிகளில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்ற அவர் தற்போது இந்தியன் வங்கிக்கான புதிய நிர்வாக இயக்குனராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

Similar News