செய்திகள்

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு: துணை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்

Published On 2017-02-20 17:38 GMT   |   Update On 2017-02-20 17:38 GMT
பெரம்பலூர் மாவட்டம் ஓகளுர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு பரிசு வழங்கினார்.
மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம் ஓகளுர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் நாகராஜன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் ராமராசு முன்னிலை வகித்தார்.

தமிழாசிரியர் சீனிவாசன் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக மங்களமேடு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால் கலந்து கொண்டு பேசுகையில், தனியார் பள்ளிகளை போல் ஓகளுர் மேல்நிலைப்பள்ளியும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களை பாராட்டுகிறேன்.

1960-ம் ஆண்டில் தந்தை பெரியாரால் தொடங் கப்பட்ட இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் வரும் பொதுதேர்வில் அனைவரும் வெற்றி பெற்று மீண்டும் 100 சதவீதம் தேர்ச்சியை பெற வேண்டும் என்றார். தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகள் மற்றும் இலக்கிய மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பாராட்டி பரிசுகளையும் வழங்கினார்.

விழாவில் முன்னாள் தலைமை ஆசிரியர் அன்பானந்தன், சத்தியமனை தலைமை ஆசிரியர் தேசிங்குராஜன், அண்ணாதுரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் இளங்கோவன் நன்றி கூறினார்.

Similar News