செய்திகள்

கவர்னருடன், டி.ஜி.பி. - போலீஸ் கமிஷனர் ஆலோசனை

Published On 2017-02-15 03:11 GMT   |   Update On 2017-02-15 03:11 GMT
போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோர் கவர்னர் மாளிகையில் வித்யாசாகர்ராவை சந்தித்து தமிழகம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.
சென்னை:

தமிழகத்தில் அரசியல் நிலவரம் சூடு பிடித்துள்ள நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோர் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்றனர். அங்கு கவர்னர்(பொறுப்பு) வித்யாசாகர்ராவை சந்தித்து பேசினார்கள்.

சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு சிறை தண்டனை கிடைத்துள்ளதையொட்டி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எவ்வாறு உள்ளது என்பது பற்றி கவர்னர் கேட்டறிந்ததாக தெரிகிறது.

கூவத்தூரில் சசிகலாவும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் சொகுசு விடுதியில் தங்கி உள்ளனர். அங்குள்ள நிலவரம் குறித்தும் கவர்னர் வித்யாசாகர் ராவ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Similar News