செய்திகள்
மலர்செடிகள் நடவு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

56-வது மலர் கண்காட்சி: கொடைக்கானல் பூங்காவில் மலர்செடி நடவு பணி

Published On 2017-02-09 10:11 GMT   |   Update On 2017-02-09 10:11 GMT
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சியையொட்டி மலர்செடிகள் நடவு செய்யும் பணி தொடங்கி உள்ளது.
கொடைக்கானல்:

மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் வருடம் முழுவதும் இதமான சீதோஷ்ணம் நிலவி வரும். இதனை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவர். அவர்களை மகிழ்விப்பதற்காக மே மாதத்தில் பிரையண்ட் பூங்காவில் மலர்கண்காட்சி வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வருடம் மே மாதம் 56-வது மலர் கண்காட்சி தொடங்க உள்ளது. இதையொட்டி பிரையண்ட் பூங்காவில் மலர்கண்காட்சி நடைபெற உள்ளது. இதனையொட்டி பூங்காவில் பல கட்டங்களாக லட்சக்கணக்கான மலர்செடிகள் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு நடவு செய்யப்பட்டுள்ளது.

இதன் இறுதிகட்டமாக உதகையில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆஸ்டர், பிளாக்ஸ், ஆந்தூரியம், கேலந்துலா, செசேனியா, டயான்ஸ், பேன்சி உள்பட பல்வேறு வகையான 25 ஆயிரம் மலர்செடிகள் நடவும் பணி தொடங்கியுள்ளது.

இதிலிருந்து மலர்கள் 70 நாட்களில் பூக்கத்தொடங்கும் எனவும், 2 மாதங்கள் வரை தொடர்ந்து பூக்கும் எனவும் தோட்டக்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது நடவு செய்யப்பட்ட நடவு மலர்கள் ஏப்ரல் முதல்வாரத்தில் பூக்க தொடங்கும் என்று கூறினர்.

Similar News