செய்திகள்

குடியரசு தினவிழா: மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர்கள் தேசியக்கொடி ஏற்றினர்

Published On 2017-01-26 04:02 GMT   |   Update On 2017-01-26 04:02 GMT
குடியரசு தினத்தையொட்டி மாவட்ட தலைநகரங்களில் நடந்த விழாவில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்தனர்.
சென்னை:

நாட்டின் 68-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேசியக்கொடியை ஏற்றி வைத்து முப்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் வீரதீர செயல் புரிந்தோருக்கான விருதுகள் உள்ளிட்ட சிறப்பு விருதுகளை வழங்கினார்.

இதேபோல் தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் குடியரசு தின விழா நடைபெற்றது. இதில், அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கலந்துகொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்தன. மதுரை, பெரம்பலூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. சிறப்பாக பணியாற்றிய போலீசார் மற்றும் ஆசிரியர்களுக்கு பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.



இதுபோன்று நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களிலும் இன்று தேசியக்கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி செல்வம் தேசியக்கொடி ஏற்றினார். இதேபோல் அரசியல் கட்சி அலுவலகங்களிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

Similar News