செய்திகள்

மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து காசிமேட்டில் 7 இடங்களில் மறியல்

Published On 2017-01-23 09:39 GMT   |   Update On 2017-01-23 09:39 GMT
மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து காசிமேட்டில் 7 இடங்களில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராயபுரம்:

ஜல்லிக்கட்டை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள், இளைஞர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று காலையில் போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

மாணவர்கள் மீதான இந்த தாக்குதலை கண்டித்து காசிமேடு சூரிய நாராயணா தெருவிலும், காசிமேடு சிக்னல் அருகேயும் பொது மக்கள் திடீர் சாலை மறியல் செய்தனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைப் போல் எண்ணூர் விரைவு சாலை, பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலை, தண்டையார் பேட்டை போஸ்ட் ஆபீஸ், தங்க சாலை மற்றம் புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் சாலையிலும் பொது மக்கள் திடீர் சாலை மறியல் செய்தனர். இதனால் அங்கும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

ஆனால் பொதுமக்கள் கலைந்து செல்ல மறுத்து விட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதே போல் திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலை, திருவொற்றியூர் குப்பம் திருச்சிரம் குப்பம், திருவொற்றியூர் நெடுஞ்சாலை காலடிப்பேட்டை, திருவொற்றியூர் பஸ் நிலையம் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்கள் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News