செய்திகள்

போராட்டம் மெதுமெதுவாக கைவிடப்படும் என ராஜேஷ் நம்பிக்கை

Published On 2017-01-22 11:31 GMT   |   Update On 2017-01-22 11:31 GMT
போராட்டம் மெதுமெதுவாக கைவிடப்படும் என்று வீர விளையாட்டு மீட்புக் கழகத் தலைவர் ராஜேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்க மாநிலத் தலைவர் தலைமையில், வீர விளையாட்டு மீட்புக்குழு, ஜல்லிக்கட்டு பேரவை உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை சந்தித்து இன்று ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து வீர விளையாட்டு மீட்புக் கழகத் தலைவர் ராஜேஷ் கூறுகையில், ‘‘சட்ட வல்லுநர்களுடன் நுணுக்கமாக ஆலோசித்து, அவசரச் சட்டம் இயற்றப்பட்டதாகவும், நாளை கூடும் சட்டப்பேரவையில் அவசரச் சட்டம் சட்ட முன் வடிவாக தாக்கல் செய்யப்பட்டு நிரந்தர சட்டமாக உருவெடுத்துவிடும் என முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.

மக்களிடம் ஐயப்பாடு இருப்பதற்கு காரணம், கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு போட்ட அரசாணையும், இப்போதைய அவசர சட்டமும் ஒன்று என நினைப்பதுதான். எனவே அப்போதைய அரசாணைக்கும் இப்போதைய அவசரச் சட்டத்திற்கும் இடையே வேறுபாடுகள் குறித்து முறையான புரிதல் இல்லாத காரணத்தினாலேயே மக்களிடம் ஐயப்பாடு நிலவுகிறது.

எனவே இதுகுறித்து மாணவர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் மத்தியில் தங்களை போன்ற அமைப்புகள் எடுத்துரைக்கும்போது போராட்டம் மெதுமெதுவாக கைவிடப்டுவதற்கு வாய்ப்பு உள்ளதாக நம்புகிறேன்’’ என்றார்.

இன்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பில், அனைத்து அமைப்புகளும் சேர்ந்து முதலமைச்சருடன் ஆலோசித்தது குறித்தும், அவசரச் சட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் போராட்டக்காரர்களுக்கு விரிவாக விளக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Similar News