செய்திகள்

ஜல்லிக்கட்டை விரைந்து நடத்துவது குறித்து அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் சசிகலா ஆலோசனை

Published On 2017-01-21 00:30 GMT   |   Update On 2017-01-21 00:30 GMT
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை, முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து ஜல்லிக்கட்டை விரைந்து நடத்துவதற்காக, பிரதமரை சந்தித்து மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விவரமாக எடுத்துரைத்தார்.
சென்னை:

அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை, முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து ஜல்லிக்கட்டை விரைந்து நடத்துவதற்காக, பிரதமரை சந்தித்து மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விவரமாக எடுத்துரைத்தார்.

ஒட்டுமொத்த தமிழக மக்களின் வேண்டுகோளான ஜல்லிக்கட்டை விரைந்து நடத்துவது குறித்து, பொதுச்செயலாளர் சசிகலா, பொருளாளரும், முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் மாவட்ட அவைத்தலைவரும், வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News