செய்திகள்

கோவை மாவட்டத்தில் 5 இடங்களில் தி.மு.க. வினர் ரெயில் மறியல் போராட்டம்

Published On 2017-01-20 12:11 GMT   |   Update On 2017-01-20 12:11 GMT
ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கக் கோரி இன்று கோவை மாவட்டத்தில் 5 இடங்களில் தி.மு.க. வினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை:

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கக் கோரி தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க.வினர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.

கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் வடகோவை ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடந்தது. ரெயில் நிலையம் முன்பு திரண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் போலீஸ் தடையை மீறி ரெயில் நிலையத்துக்குள் நுழைந்தனர்.

அப்போது டெல்லியில் இருந்து கோவை வழியாக திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அதிகாலை 5 மணிக்கு வர வேண்டிய இந்த ரெயில் 5 மணி நேரம் தாமதமாக 10 மணிக்கு வந்த நிலையில் அதை மறித்து தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாவட்ட செயலாளர்கள் நாச்சிமுத்து, முத்துசாமி, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, கார்த்திக் எம்.எல்.ஏ., இளைஞரணி மாநில துணை செயலாளர் பைந்தமிழ் பாரி, விவசாய அணி அமைப்பாளர் பையா கவுண்டர், இலக்கிய அணை அமைப்பாளர் திராவிடமணி, சிங்கார வேலு, விஜயசேகர், கண்ணன், பகுதி செயலாளர்கள் குறிச்சி பிரபாகரன், எஸ்.எம்.சாமி, மீனாலோகு, லோகநாதன்,

விவசாய அணி அமைப்பாளர் கார்த்திக் செல்வராஜ், தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இளங்கோ, பொருளாளர் நாச்சிமுத்து, வக்கீல் மகுடபதி, முருகவேல், ராஜேந்திரபிரபு, கார்த்திகேயன், வடகோவை ஜார்ஜ், வி.பி.கிருஷ்ண மூர்த்தி, இளங்கோ, பிரபாகரன், ஜெகதீசன், சுலைமான், மற்றும் மகளிர் அணியினர் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போலீசார் அவர்களை கைது செய்தனர்.

பீளமேடு ரெயில் நிலையத்தில் நடந்த மறியல் போராட்டத்துக்கு தெற்கு மாவட்ட துணை செயலாளர் சிங்கை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். 39-வது வட்ட செயலாளர் பி.டி.முருகேசன், தெற்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மில் ரவி, நெசவாளர் அணி துணை அமைப்பாளர் தமிழ் கா.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிர்வாகிகள் கருப்பசாமி, மனோகரன், செல்வராஜன், சுஜினி, செல்வராஜ், சாமியானா சம்பத், மாரப்பன், ராமு, தனபால், கோபிநாத், கலைசெல்வி, தங்கமணி, யசோதா, சுகுணாதேவி, கலா மணி ஆகியோர் உள்பட 100-க்கும் கலந்து கொண்டனர். அப்போது ஈரோட்டில் இருந்து கோவை வந்த பயணிகள் ரெயிலை மறித்தனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

சூலூர் ரெயில் நிலையத்தில் நடந்த போராட்டத்திற்கு நகர செயலாளர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தன்ராஜேந்திரன், அஜய், கல்யாணசுந்தரம், தங்கராஜ், ஜாணி, வீராசாமி, ஆறுமுகம், செந்தில், ஹரி, திலீபன், மாலதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவையில் இருந்து சேலம் சென்ற பயணிகள் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சியில் இன்று காலை பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சிக்கு வந்த அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயிலை தி.மு.க.வினர் மறித்தனர்.

தெற்கு மாவட்ட செயலாளர் தமிழ்மணி, பொள்ளாச்சி நகர செயலாளர் தென்றல் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ரெயில் நிலையத்தில் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் மீது ஏறி நின்று, ‘ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவை தடை செய்ய கோரியும்’ கோ‌ஷமிட்டனர்.

பின்னர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து பொள்ளாச்சி மீன்கரை சாலையில் திடீரெ மறியல் போராட்டம் நடத்தினர்.

பின்னர் அவர்களை போலீசார் தி.மு.க.வினரை கலைந்து போக கூறினர். சிறிது நேரம் மறியல் செய்த தி.மு.க.வினர் அதன்பின்னர் கலைந்து சென்றனர்.

மேட்டுப்பாளையம் நகர ஒன்றிய தி.மு.க.வினர் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கோரி மேட்டுப்பாளையம்- காரமடை ரோட்டில் உள்ள தியேட்டர் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.

ஊர்வலத்தில் டி.ஆர்.சண்முகசுந்தரம் மாட்டு வண்டியுடன் கலந்து கொண்டார். பின்னர் அவர்கள் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையம் வந்தனர்.

அப்போது கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த பாசஞ்சர் ரெயிலில் ஏறி ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னால் எம்.எல்.ஏ., அருண்குமார், கல்யாணசுந்தரம். மேட்டுப்பாளையம் நகர செயலாளர் முகமது யூனிஸ், காரமடை நகர செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News