செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு: அரசு அலுவலர்கள் நாளை தற்செயல் விடுப்பு போராட்டம்

Published On 2017-01-19 05:33 GMT   |   Update On 2017-01-19 05:33 GMT
ஜல்லிக்கட்டுக்காக ஆதரவாக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு அரசு அலுவலர் ஒன்றியம் ஆதரவு அளித்துள்ளது.
சென்னை:

ஜல்லிக்கட்டுக்காக ஆதரவாக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு அரசு அலுவலர் ஒன்றியம் ஆதரவு அளித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் இரா. சண்முகராஜன் கூறியதாவது:-

தமிழர்களின் பாரம்பரியமான பண்பாடு, கலாச்சாரத்திற்கு அடையாளமாக கருதப்படும் ஜல்லிக்கட்டு மீண்டும் நடைபெற வேண்டும் என்று வற்புறுத்தி தமிழகத்தில் தன் எழுச்சியாக மாணவர்களும், இளைஞர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இளைஞர்களின் இந்த எழுச்சியான போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் (என்.ஜி.ஒ.) தார்மீக ஆதரவு தெரிவிக்கிறது.

இந்த போராட்டத்தில் அரசு அலுவலர்கள் பங்கேற்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடனும் ஜல்லிக்கட்டு உள்பட தமிழர்களின் பாரம்பரிய உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலும் நாளை (20-ந்தேதி) அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைத்து அரசு அலுவலகங்களும் இதனை ஏற்றுக்கொண்டு தற்செயல் விடுப்பு அளித்து போராட்டத்தினை வெற்றி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News