செய்திகள்

பழனியில் போலீஸ் தாக்குதலை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2017-01-07 13:42 GMT   |   Update On 2017-01-07 13:42 GMT
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மீது நடைபெற்ற போலீஸ் தாக்குதலை கண்டித்து. பழனியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பழனி:

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மீது நடைபெற்ற போலீஸ் தாக்குதலை கண்டித்து. பழனியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகரச் செயலாளர் குருசாமி தலைமை தாங்கினார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நகர தலைவர் கோபி முன்னிலை வகித்தார்.

சி.ஐ.டி.யூ மாநில குழு உறுப்பினர் மனோகரன், பழனி நகர்மன்ற முன்னாள் தலைவர் ராஜமாணிக்கம் சிறப்புரை ஆற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் சென்னையில் நடைபெற்ற தாக்குதலில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜாவை பாலியல் வன்கொடுமை சட்டத்தில் கைது செய். ஆர்ப்பாட்டம் செய்த ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மீது தாக்குதல் நடத்திய பள்ளிக்கரனை இன்ஸ்பெக்டர் நடராஜ், சப்இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், மோகன்தாஸ் மற்றும் காவலர்கள் மீது கொலை முயற்சி வழக்குபதிவு செய்து கைது செய், என கோ‌ஷமிட்டனர்.முடிவில் பிச்சைமுத்து நன்றி கூறினார்.

Similar News