செய்திகள்

ஜி.கே.வாசன் பிறந்தநாள்: பிரணாப் முகர்ஜி - மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Published On 2016-12-28 08:25 GMT   |   Update On 2016-12-28 08:25 GMT
இன்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனின் பிறந்தநாளையொட்டி அவருக்கு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி அவருக்கு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, குமரி அனந்தன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் போனில் வாழ்த்து தெரிவித்தனர்.

ஜி.கே.வாசன் பிறந்த நாளையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள், நலத்திட்ட உதவிகள் வழங்கி கட்சியினர் கொண்டாடினார்கள்.

தென்சென்னை வடக்கு மாவட்ட த.மா.கா. சார்பில் மாவட்ட தலைவர் சைதை மனோகரன் ஏற்பாட்டில் வடபழனி முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்தனர். மூத்த துணைத்தலைவர் ஞானதேசிகன் தொடங்கி வைத்தார்.

இதில் கோவை தங்கம், டி.எம்.பிரபாகர், கத்திப்பாரா ஜெனார்த்தனன், சைதை நாகராஜன், தி.நகர் கோதண்டன், கே.டி.எஸ்.ராஜா, பகுதி தலைவர்கள் கோவில் பாஸ்கர், வடபழனி பிரபாகரன், சாந்தாராம், பாண்டி பஜார் பழனி மற்றும் பட்டுக்கோட்டை பூபதி, மயிலை இரா.மணி, மந்தவெளி இராம.அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோடம்பாக்கம் அன்னை இல்ல முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

வடசென்னை கிழக்கு மாவட்டத்தில் மாவட்ட தலைவர் பிஜுசாக்கோ ஏற்பாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. திரு.வி.க.நகர் நகர் தொகுதி ஜமாலியாவில் விநாயகர் கோவிலில் கல்யாணிசேகர் முன்னிலையில் சிறப்பு வழிபாடு நடந்தது.

ஆர்.கே.நகர் தொகுதியில் மாரி, ஜனார்த்தனன் ஏற்பாட்டில் மண்ணப்ப முதலி தெரு சிதம்பர விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

எர்ணாவூர் மாகாளி அம்மன் கோவிலில் பெரிய சாமி ஏற்பாட்டில் சிறப்பு வழிபாடு நடந்தது.

சைதாப்பேட்டையில் கருணை இல்ல மாற்றுத் திறனாளிகளுக்கு தி.நகர் கோதண்டன் ஏற்பாட்டில் காலை உணவு வழஙக்ப்பட்டது. இதில் சைதை திலிப், என்.எம்.கிருஷ்ணகுமார், ராமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வில்லிவாக்கம் காளியம்மன் கோவிலில் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் அபிசேஷம் நடந்தது. அதை தொடர்ந்து வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில் கட்சி கொடியை மாநில பொதுச்செயலாளர் ஞானசேகரன் ஏற்றி வைத்தார்.

ராயபுரம் ஆதரவற்றோர் இல்லத்தில் மாவட்ட தலைவர் பாலா தலைமையில் மதிய உணவும் ஞானசேகரன் வழங்கினார்.

அயனாவரம் தாகூர் நகர் ஸ்ரீ தேவி கருமாரி அமமன் ஆலயத்தில் மத்திய சென்னை சிறுபான்மைபிரிவு மற்றும் வில்லிவாக்கம் கிழக்கு பகுதி த.மா.கா சார்பில் சிறப்பு பூஜை செய்து இனிப்பு வழங்கப்பட்டது. சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஆர். புனிதன், தொகுதி தலைவர் என். பத்மநாபன், மாவட்ட பொதுச்செயலாளர் வினோ பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வில்லிவாக்கத்தில் மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் என். ரவிச்சந்திரன் தலைமையில் பாலி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஞானசேகரன், தொகுதி தலைவர் பாரதி பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரிமா ரத்த சுத்திகரிப்பு மையத்தில் ஜி.கே.எம்.அரிமா சங்கம் சார்பில் த.மா.கா. தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ் நோயாளிகளுக்கு மருத்துவ செலவையும், பழங்களையும் வழங்கினார்.

Similar News